Friday 16 July 2021

மூலத்தை அடித்து விரட்டி மூலக்கட்டியை இல்லாமல் செய்யும் சக்திவாய்ந்த இலை! எப்படி பயன்படுத்துவது?

SHARE

மூலம், ஆசனவாய் வெடிப்பு, பெளத்திரம் போன்றவற்றில் மூலநோய் முக்கியமானது.

பொதுவாக உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லப்படும் சிரை ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இது சிரைக்குழாய்களில் ரத்தம் தேங்கியிருப்பதை தடுக்கின்றன.

ஆனால் ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்கு செல்லும் சிரைக்குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையில் இல்லை. இதனால் இங்கு அழுத்தம் அதிகரிக்கும் போது ரத்தம் தேங்கி அந்த இடத்தில் சிறிய பலூன் போன்று வீங்கிவிடுகிறது. இந்த ரத்தக்குழாய் வீக்கம் தான் மூலநோய் என்று அழைக்கப்படுகிறது.

மூலத்துக்கு கை வைத்தியம் உண்டா?

மூலம், பெளத்திர நோய்களுக்கு கை கண்ட மருந்து என்று கை வைத்தியங்கள் செய்பவர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.

இதன் ஆரம்ப கால அறிகுறியை கண்டால் கை வைத்தியத்திலும் உணவு முறையிலும் முழுமையாக குணப்படுத்த முடியும் சிலருக்கு மருத்துவ சிகிச்சையோடு உணவு முறை சரியானதாக திட்டமிட்டாலே மூலத்துக்கு விடை கொடுத்துவிடலாம்.

ஆனால் இதற்கெல்லாம் அவசியமில்லாமல் வீட்டில் பெரியவர்கள் மலச்சிக்கல் வந்தாலே அதை சரிசெய்து விடுவார்கள்.

ஆசனவாயில் மூலக்கட்டி, ஆசனவாய் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் ஆசனவாய் கட்டியை குறைக்க பல வைத்தியங்கள் குறித்து சொல்லியிருக்கிறார்கள். அதில் ஒன்று கொய்யா இலை. கொய்யா இலையை கொண்டு ஆசனவாய் வெடிப்பு, மூலக்கட்டியை குணப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

​ஆசனவாய் கட்டிக்கு கொய்யா இலை

ஆசனவாய் பகுதியில் வெளிப்புறத்தில் மூலக்கட்டி இருந்தால் உங்களுக்கு இந்த கைவைத்தியம் பெரிதும் பலனளிக்கும். இரண்டு கைப்பிடி கொய்யா இலையை எடுத்து கொள்ளுங்கள். அதை அலசி பொடியாக நறுக்கி நீரில்லாமல் உலர வைத்து இளஞ்சூட்டில் 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

பிறகு மூன்று சொம்பு நீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய கொய்யா இலையை சேர்த்து இலேசாக கொதிக்க வைத்து இறக்கி விடவும். பிறகு இளஞ்சூடாக வரும் வரை ஆறவிட்டு நீரை வடிகட்டி கொள்ளவும்.

இந்த நீரை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆசனவாய் மூலக்கட்டி இருக்கும் இடம் படும்படி வைத்து சில நிமிடங்கள் உட்கார வேண்டும். அல்லது அந்த நீரை மூலக்கட்டி இருக்கும் இடத்தில் மென்மையாக கழுவி வர வேண்டும்.

தினமும் மூன்று முறை இதை கழுவி வந்தால் மூலக்கட்டி சுருங்கி இல்லாமல் போகும். மூலம் சுருங்கும் வரை இதை செய்ய வேண்டும்.
SHARE