Friday 16 July 2021

உடல் எடை வேகமாக குறைய இந்த ஒரே ஒரு பொருள் போதும் ? தினமும் ஒரு கப் டீ குடிங்க!

SHARE

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.

தேவையான பொருட்கள்

கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

புதினா - ஒரு கைப்பிடியளவு

இஞ்சி - 1 இஞ்ச் அளவு

தேன் - 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.

அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.

புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும். இப்போது டீ பாதி தயாராகிவிட்டது. இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும்.

அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.

காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை. முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும்.

அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும். இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.
SHARE