ஐபோன் 12 சீரிஸ் மொபைல் போன் வைத்துள்ளீர்களா? உங்களுக்கா மேக்சேஃப் பேட்டரி அறிமுகம்..!!!


நவீன உலகில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதிலும், இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது.

ஆனால், என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பலரும் பயன்படுத்தினாலும் ஐபோன் பயன்பாட்டாளர்களின் மதிப்பு குறையவே இல்லை.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம், புதிய மேக்சேஃப் பேட்டரி பேக் (Magsafe Battery Pack) ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐபோன் மாடல்களுக்கென பேட்டரி கேஸ் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்யும். ஆனால் இம்முறை அறிமுகமாகி இருக்கும் மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோனின் பின்புறம் காந்த சக்தி மூலம் ஒட்டிக்கொள்ளும்.

மேலும், புதிய மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு பொருந்தும். இதை கொண்டு ஐபோன்களின் பேட்டரி ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

இந்த பேட்டரி பேக் ஐபோனின் பின்புறம் வைத்ததும், ஐபோன் சார்ஜ் ஆக துவங்கி விடும். இதனை சார்ஜ் செய்வதற்கான கேபிள் வழங்கப்படவில்லை.

இதனால் ஐபோனிற்கு கொடுக்கப்பட்ட கேபிள் கொண்டு மேக்சேஃப் பேட்டரி பேக் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோனினை 5வாட் திறன் கொண்டு சார்ஜ்செய்யும். இந்தியாவில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான ஆப்பிள் மேக்சேஃப் பேட்டரி பேக் விலை ரூ. 10,990 ஆகும்.
Previous Post Next Post


Put your ad code here