வரும் ஓகஸ்ட் மாதத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று நம்புவதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று நரஹன்பிட்டவில் ஊடகங்களுடன் பேசிய கல்வி அமைச்சர், இலங்கையில் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும் பகுதியினர் ஏற்கனவே கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
பல கட்டங்களில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஜூலை மாதத்தில் சில பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசு நம்புவதாக கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.
பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக வகுப்புகளை இணையம் ஊடாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news