பயணிகள் பஸ் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிந்து நெடுஞ்சாலையில் சயில்கோட்டிலிருந்து ரஜன்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் காஸி கான் பகுதியில் எதிர்பாராத விதமாக லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது .இதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் பலியானார்கள் என்றும் 44 பேர் படுகாயத்துடன் காஸி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல் கண்காணிப்பாளர் இர்ஷாத் அஹமது தெரிவித்திருக்கிறார்.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 40 பேர்களில் 4 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தன்னுடைய இரங்கல் செய்தியைப் பகிர்ந்ததோடு ” வரவிருக்கும் ஈதுல் -ஆஷா பண்டிகையைக் கொண்டாட வீடு திரும்பிக்கொண்டிருத்தவர்களுக்கு ஏற்பட்ட சோகம் பேரழிவிற்கு நிகரானது. கடவுள் இறந்தவர்களுக்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தையும், உறவுகளை இழந்த குடும்பத்தார்களுக்கு மன தைரியத்தையும் கொடுக்கட்டும் ” எனத் தெரிவித்திருக்கிறார்.
Tags:
world news