ஊரணி வைத்தியசாலையில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா – 2 நாள்களின் பின் அறிவிப்பு..!!!


வல்வெட்டித்துறை ஊரணி் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக மூன்றாவது நாளான இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் நேற்று மாதிரிகளின் அளவு போதாது என அறிக்கையிடப்பட்டது.

அதனால் அவரது மாதிரிகள் மீளப்பெறப்பட்டு இன்று மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் அவரது சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவுள்ளது.

இதவேளை, பருத்தித்துறை சுப்பர்மடத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட பருத்தித்துறை இராஜகாமத்தைச் சேர்ந்த வைரவா நாகரட்ணம் (வயது -78) என்ற முதியவரின் மாதிரிகளும் மீளப்பெற வேண்டும் என்று இன்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here