யாழ்ப்பாணம் வரணி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு வரணியில் உள்ள மதுபான உற்பத்திச் சாலையில் பணியாற்றும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதனை அடுத்து அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வரணி மத்தி, வரணி, மாசேரி, கறுக்காய் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 79 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.