வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.18 வீதம் பேர் இதுவரை முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அத்துடன், 83 வீதமானவர்கள் குறைந்தது ஒற்றைத் தடுபூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக மாகாண தடுப்பூசி தரவுகள் தெரிவிக்கின்றன.
வட மாகாணத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளத் தகுதியான 30 வயதுக்கு மேற்பட்ட 657,547 பேரில் இதுவரை 544,943 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், அத்துடன், 178, 690 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 285,775 பேர் (83%) பேர் ஒரு தடுப்பூசியையும் 104,504 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டனர்.