ஒரு முறை பார்த்தாலே மறைந்துவிடும்... அசத்தலான அப்டேட்டை வழங்கும் வாட்ஸ் ஆப்..!!!


புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை பார்த்த பிறகு மறைந்து போகும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கும் நோக்கில், ‘View Once’ என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதி, அனுப்பப்படும் போட்டோ அல்லது வீடியோக்கள் மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு முறை போட்டோவை Open செய்து பார்த்துவிட்டு, அவர் Chat-ஐ விட்டு வெளியே வந்துவிட்டால், அந்த போட்டோ தானாக மறைந்துவிடும்.

மேலும், அந்த போட்டோ சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் Save ஆகாது என்றும் வேறொரு நபருக்கு அனுப்ப (Forward) செய்ய முடியாது என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை பயனர்கள் போட்டோ அல்லது வீடியோக்களை பகிரும் போது, செண்ட் பட்டனுக்கு முன்னதாக ஒன்று என வட்டமிட்டு திரையில் தோன்றும். அதனை தேர்வு செய்து அனுப்பப்படும் போட்டோ மற்றும் வீடியோக்களை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனாலும், அந்த போட்டோவை ஸ்கிரீன்ஷாட் (Screenshot) எடுத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம், ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ என்பது போல பார்த்தவுடன் மறைந்துவிடும் என உள்ளதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக குறிப்பிட்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here