2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி நாள் செப்ரெம்பர் 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 31ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு இந்தத் திகதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news