சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, பொதுபோக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் புகையிரத திணைக்களத்துக்கு சுமார் 100 கோடி ரூபா நஷ்டமும், இலங்கை போக்குவரத்து சபைக்கு 80 கோடி ரூபா நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, மதுவரித் திணைக்களத்துக்கு 6 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வேலை நாளொன்றில் மதுவரி திணைக்களத்தின் மூலம் திறைசேரிக்கு குறைந்தது 600 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news