நாடு முடக்கப்படமாட்டாது - திருமண, மரண சடங்குகளுக்கு கட்டுப்பாடு..!!!


நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் , சில கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here