இலங்கையில் தற்போது பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா திரிபை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், இலங்கைக்கு சொந்தமான புதிய கொவிட் வைரஸ் திரிபொன்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் காலப் பகுதியில் இலங்கைக்குள் புதிய திரிபொன்று உருவாகும் அபாயம் காணப்படுவதாக ஔடதம் மற்றும் ஔடதம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் டொக்டர் சஞ்ஜய பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றமையினால் இலங்கைக்குள் புதிய வைரஸ் திரிபு உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு உருவாகும் வைரஸ், தற்போதுள்ள வைரஸை விடவும் வீரியம் கொண்டதாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்
Tags:
sri lanka news