கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர்..!!!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலை (18) உயிரிழந்துள்ளார்.

ராகம மருத்துவமனையில் பணியாற்றிவந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தாம் பணியாற்றிய அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில்,, கடந்த சில தினங்களுக்கு முன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த மருத்துவர் கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here