இலங்கையில் கொரோனாத் தொற்று மற்றும் மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார்த்துறை பிரிவுகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குறித்த நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news