நாடு முடக்கப்படாது என்றாலும், பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீண்டும் வலியுறுத்தினார்.
நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
“நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரம் பாதிக்கப்படும், மேலும் தினசரி ஊதியம் பெறுபவர்களும் விவசாயிகளும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதைத் தொடர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறினார்.