இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக அவர்களுக்கு இருந்த நோய்கள் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறிருப்பினும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு இரண்டு வாரங்களின் பின்னரே தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு செயற்றிறன் அதிகரிக்குமென அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரையில், 21 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேபோல நாட்டில் இதுவரை 2 , 800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 700 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news