Wednesday 29 September 2021

20 இலட்ச ரூபாய் அதிஸ்ட பணத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்..!!!

SHARE

கிளிநொச்சி பெண்ணுக்கு 20 இலட்ச ரூபாய் அதிஷ்டம் விழுந்துள்ளது என கூறி அப்பெண்ணிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்ப பெண் ஒருவரிடம் 0779823271 அழைப்பை மேற்கொண்ட ஒருவர் டயலொக் தொலைபேசி வலையமைப்பு அலுவலர் போன்று உரையாடி, குறித்த பெண்ணுக்கு 20 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துளார்.

அதிஸ்டத்தின் திகதி நேற்றுடன் முடிவுற்றுள்ளது. அதனை மீளவும் புதுப்பிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் எனவே நாம் கூறும் தொலைபேசி இலக்கங்களுக்கு 50 ஆயிரம் ரூபாவை eZ cash மூலம் பணத்தை அனுப்பிவிட்டு இலங்கை வங்கிக்கு அடையாள அட்டை, உள்ளிட்ட ஆவணங்களுடன் செல்லுமாறும், அங்கிருந்து தமக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய குறித்த பெண் கடன் பெற்று அவர்கள் குறிப்பிட்ட 0740236933, 0741073345, 0741082611, 0741056057, 0741084823 ஆகிய 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் eZ cash மூலம் அனுப்பியுள்ளார்.

பணத்தை அனுப்பிவிட்டு வங்கி சென்று அங்கிருந்து 0779823271 இவ்விலகத்திற்கு அழைப்பை மேற்கொண்ட போது தொலைபேசி செல்லுபடியற்ற இலக்கம் பதில் வந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை அவர் அறிந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில் குறித்த பெண் உரையாடிவருடன் தனக்கு இதில் நம்பிக்கையில்லை தான் ஏமாற்றப்படலாம் எனத் தெரிவித்த போது உரையாடிவர் அப்படியானால் நீங்கள் எங்களது முகாமையாளருடன் பேசுங்கள் என தொலைபேசியை பிரிதொருவரிடம் வழங்க அவரும் ஒரு முகாமையாளர் போன்று சிங்களத்தில் உரையாயாடியுள்ளார். இதன் பின்னரே குறித்த பெண் தனக்கு அதிஸ்டம் வீழ்ந்துள்ளது என நம்பியுள்ளார்.

20 இலட்ச ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு, கடன் பட்ட 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை இழந்த நிலையில் வீடு திரும்பினார்.
SHARE