Saturday 25 September 2021

தன்னை அடித்த ஆட்டோ ஓட்டுநரை பழி வாங்க 22 கி.மீ பயணித்து வந்த குரங்கு..!!!

SHARE

சிக்க மங்களூரு பகுதியில் குரங்கு ஒன்று பழி வாங்குவதற்காக 22 கிலோ மீ பயணித்து வந்துள்ளது. அந்த குரங்கிற்கு பயந்து 8 நாட்களாக ஆட்டோ டிரைவர் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளார்.

சேட்டை செய்யும் சிறுவர்களை பார்த்து குரங்கு சேட்டை செய்யாதீர்கள் என சொல்வோம். சிறுவர்கள் சேட்டை செய்தால் அதை நாம் குரங்கு சேட்டை என சொல்லி திட்டுவோம். சேட்டைகளுக்கு பெயர் போனது குரங்கு, தெருவில் செல்லும்போது நாம் கொண்டு செல்லும் பொருட்களை பிடுங்கி செல்வது தொந்தரவு செய்வது, வீட்டில் உள்ள செடிகளை வீணாக்குவது என குரங்குகள் அதிகமாக சேட்டை செய்யும் இது எல்லாம் நமக்கு தெரியும் ஆனால் குரங்கு பழி வாங்கும் என சொன்னாம் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு பகுதிக்குட்பட்ட கோட்டீகேஹரா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஒன்று உள்ள அந்த பள்ளிக்குள் சில நாட்களுக்கு முன்பு புகுந்த குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதை பள்ளி நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் சில பொதுமக்களின் உதவியுடன் குரங்கை பிடிக்க முடிவு செய்தனர்.

அப்பொழுது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர் ஜெகதீஷின் உதவியை நாடினர். அப்பொழுது அவர் குரங்கை விரட்டி குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி ஓட வைக்க முயற்சி செய்தார். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் குரங்கு ஆட்டோ டிரைவர் கெஜதீஷை தாக்கியது. இதனால் விழுந்தடித்து ஓடினார் ஜெகதீஷ் ஒரு வழியாக குரங்கை எப்படியோ வனத்துறையினர் மடக்கி பிடித்துவிட்டனர்.

வனத்துறையின் பிடித்த குரங்கை சுமார் 22 கி.மீ தொலைவில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தனர். குரங்கை விட்ட சில மணி நேரங்களில் குரங்கு மீண்டும் ஜெகதீஷை தேடி வந்தது. அப்பொழுது ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த ஜெகதீஷை பார்த்து ஆட்டோவின் மீது தாவியது. ஆட்டோவின் கவரை கிழத்து நாசம் செய்ய துவங்கியது. இதையடுத்து அவர் பயந்து தன் வீட்டிற்கு சென்று பதுங்கிவிட்டார். தற்போது அந்த குரங்கு அவர் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது. இந்த சம்பவம் நடந்து 8 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஜெகதீஷால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. குரங்கு அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வருகிறது.

ஜெகதீஷ் விரட்டிய குரங்கும் இதுவும் ஒரே குரங்குதான் என்பதற்கு அந்த குரங்கிற்கு காதிலிருந்த ஒரு அடையாளத்தை அனைவரும் பார்த்தும் அடையாளம் கண்டு கொண்டனர். இந்த குரங்கை பிடிக்க தற்போது வனத்துறையினர் மீண்டும் முயற்சி செய்துவருகின்றனர்.
SHARE