Monday 27 September 2021

இந்த வார ராசிபலன் – 27.09.2021 முதல் 02.10.2021 வரை..!!!

SHARE

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி உங்களை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. தேவைப்பட்டால் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். மன நிம்மதி பிறக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. நீங்கள் பொறுமையோடு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் உங்களுக்கு வெற்றி தான். அவசரப்பட்டு கோபப்பட்டு உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மையை நீங்களே கெடுத்துக் கொள்ளக் கூடாது. கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். குழப்பமான பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு யோகம் வரும். வீட்டில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகி, கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகிறது. வார தொடக்கத்தில் உங்களுடைய வேலைகளையெல்லாம் முடித்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையில் இடமாற்றம் வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். வீட்டில் தடைபட்டு வந்திருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்யலாம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. மனதில் இனம் புரியாத நிம்மதி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பல நாள் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். கடன் பிரச்சனை தீரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இல்லை. குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமைந்தால் சந்தோஷத்திற்கு இடமிருக்காது. வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல புகழ் பாராட்டை பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் தேவையில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயமாக இருந்தால் கூட அதை ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். அப்போதுதான் உங்களுடைய திறமை இந்த உலகத்திற்கு தெரியும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் சிந்திக்காமல் நீங்கள் எடுக்கக் கூடிய சில முடிவுகள், உங்களை தேவையில்லாத பிரச்சனையில் தள்ளி விட வாய்ப்பு உள்ளது. ஓம் நமசிவாய மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த வார இறுதியில் பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்களே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தின் மூலம் நீங்களே எதிர்பார்க்காத ஒரு லாபம் உங்கள் கை வந்து சேரும். கடன் பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளி வந்து விடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து கைக்கு வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நிறைய சொத்து நிறைய பணம் காசு கைக்கு வந்தாலும், செலவில் சிக்கனம் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்ததெல்லாம் நிறைவேற போகின்ற வாரமாக அமையப்போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத யோகம் வரும். வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் சேமிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். ஒரு வேலையை எடுத்தால் அதை செய்து முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு செயல்பட்டு நல்ல பெயரை எடுப்பீர்கள். புகழும் பாராட்டும் உங்களுக்கு சொந்தமாக போகின்றது. தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதிரிகளிடம் அதிகமாக கோபப்பட்டு பேச வேண்டாம். முடிந்தவரை எதிரிகளை நண்பராக மாற்றிக் கொள்ளப் பாருங்கள். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். பொறுமை அவசியம் தேவை. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. சுப செய்திகள் உங்கள் செவிகளை தேடிவரும். வீட்டில் திருமணம் நிச்சயம் போன்ற சுபகாரியங்கள் நடப்பதற்கான வேலைகளை தொடங்க ஆரம்பிப்பீர்கள். எல்லா விசேஷங்களுக்கும் பணம்தான் கையை கொஞ்சம் கடிக்கும். சுபவிரயங்கள் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் அதிக கவனம் தேவை வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரணையோடு நடத்துங்கள். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.
SHARE