3 மணிநேரத்தில் PCR முடிவுகள்- கடமையை ஆரம்பிக்கிறது புதிய மத்திய நிலையம்..!!!


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பெறுபேற்றை கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வுக்கூட கட்டமைப்பின் ஊடாக மணித்தியாலத்திற்கு 500 பீ.சி.ஆர் முடிவுகளையும், நாளொன்றில் 7,000 முடிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பரிசோதனைகளுக்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமாக 40 டொலர் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here