Saturday 25 September 2021

விரும்பிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? சுகாதார அமைச்சு விளக்கம்..!!!

SHARE

தங்களுக்கு அவசியம் என கருதும் தடுப்பூசியொன்றை செலுத்திக்கொள்ள வேண்டுமாயின், அது தொடர்பில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்படும் போது அது குறித்து ஆராய தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு கல்விக்காகவும், தொழில் நிமிர்த்தமும் செல்லும் சந்தர்ப்பங்களில், குறிப்பிடப்பட்ட தடுப்பூசி மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த நாடுகள் கோரியுள்ள உத்தியோகப்பூர்வ ஆவணத்தையும் கோரிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரமே செலுத்திக் கொண்டால், தமது நாடு ஏற்றுக்கொள்ளும் என உலகிலுள்ள எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE