கஜேந்திரன் எம்.பி. உள்ளிட்ட மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு..!!!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அஞ்சலி செலுத்த முற்பட்ட போது மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி சிலரை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவருக்கும் பி அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மூவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுமாறு அறிவுறுத்தலின் கீழ் இவ்வாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Previous Post Next Post


Put your ad code here