வெள்ளியன்று நாட்டைத் திறக்க வழிகாட்டுதல்கள் தொகுப்பு; தடுப்பூசி போடாதவர்களுக்கு நடமாடத் தடையில்லை..!!!


ஒக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்று இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என்று எந்தக் கட்டுப்பாடும் வெளியிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை குறிவைத்து தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான வழிமுறைகளைத் தயாரிக்குமாறு அனைத்து அமைச்சுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here