வடமராட்சியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் – தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள்..!!!


யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாள்வெட்டு குழு ரவுடியான "வெட்டுகுமார்" என்பவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடி வருகின்றனர்.

கடந்த 2 ம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த வாள்வெட்டு குழு ரவுடியான வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரு வீடுகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த குறித்த கும்பல் அப்பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளின் ஜன்னல்கள் உடைத்தும், சொத்துக்கள் உடமைகள் என்பவற்றுக்கு தீ வைத்து அவற்றை தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்நிலையில் ரவுடி வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனது சகோதரன் ஜெயா என்ற ரவுடி உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளதாக தொியவருகின்றது.

இந்நிலையில் தினமும் அச்சத்துடன் வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கூறியிருக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here