நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதன்பின்னர் இரவுவேளைகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுலில் வைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்க வாய்ப்புகள் காணப்படுவதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், எதிர் வரும் முதலாம் திகதிமுதல் புதிய சுகாதார வழிகாட்டியொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் கூட்டமாக ஒன்றுகூடுவதை முழுமையாக தவிர்க்கும் வகையிலான சுகாதார வழிகாட்டியொன்றே வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின் றன.
இதன்படி, இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்க வாய்ப்புகள் காணப்படுவதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதிமுதல் புதிய சுகாதார வழிகாட்டியொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் கூட்டமாக ஒன்றுகூடுவதை முழுமை யாக தவிர்க்கும் வகையிலான சுகாதார வழிகாட்டியொன்றே வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.