நாட்டில் ஓகஸ்ட் 20ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.