எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களையும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பணிக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் தனியார் நிறுவன ஊழியகர்ளையும் குறித்த தினத்தில் பணிக்கு திரும்புவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச ஊழியர்களை காலை 9 மணிக்கும், தனியார் ஊழியர்களை காலை 10 மணிக்கும் பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக பொது போக்குவரத்து சேவைகளின் ஊடாகவும் வழமைப்போன்று ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிதியமைச்சரின் தலைமையில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.