14 நாட்களில் 60,000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்..!!!


கடந்த 14 நாட்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை 60,000ஐ கடந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை அதேபோல காணப்படுவதாக அத்திணைக்களத்தின் கடவுச்சீட்டு கட்டுப்பாட்டாளர் எச்.பி.சந்ரபால தெரிவித்தார்.

கடந்த 5ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 14 அலுவலக நாட்களில் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்போதைய நெரிசலைக் குறைக்கும் வகையில் அலுவலகப் பணிகள் காலை 6 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாதத்திற்கு பின்னர் இந்நிலைமை படிப்படியாக குறையுமெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here