மின்சார சபை ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு..!!!


கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணத்தில் உள்ள வடபிராந்திய அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 சதவீதப் பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகங்களுக்கு முன்பாக இன்று மதியம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் வடபிராந்தியக் காரியத்திற்கு முன்பாகவும் போராட்டம் இடம்பெற்றது.




Previous Post Next Post


Put your ad code here