25 நாட்களை கடந்த ’கோடியில் ஒருவன்’


ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 2021, 17ஆம் தேதி வெளிவந்த படம் 'கோடியில் ஒருவன்'. கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதக் கடைசியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், அதற்குப் பிறகு வெளிவந்த புதிய படங்கள் வெற்றி பெறவில்லை.

ஆனால், 'கோடியில் ஒருவன்' படத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு தியேட்டர்களை நோக்கி பார்வையாளர்கள் வந்தனர்.

அதனால், படத்திற்கு எதிர்பார்த்த நல்ல வசூல் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள 9 விநியோக பகுதிகளில் இரண்டு பகுதிகளை தவிர்த்து ஏழு ஏரியாக்களில் விஜய் ஆண்டனியே ரீலீஸ் செய்தார்.

தற்போது படத்தை தயாரித்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'லாபம்' படம் வசூலைக் கொடுக்கும் என்று நம்பிய தியேட்டர்காரர்களுக்கு விஜய் ஆண்டனி படம் லாபத்தைக் கொடுத்தது எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது.

இப்போதும் 'கோடியில் ஒருவன்' படம் 50 தியேட்டர்களில் 25 நாளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனா பொது முடக்கம், இரண்டாம் அலை இவைகளை கடந்து வெளியான கோடியில் ஒருவன் 25 நாட்களை கடந்து 50 திரைகளில் ஓடிக்கொண்டிருப்பது திரையரங்கு தொழில் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது என்பதே தியேட்டர் உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது.
Previous Post Next Post


Put your ad code here