எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் ஜெய்பீம் டிரைலர்..!!!


நீதிமன்ற விவாதங்களை திரைக்கதைகளமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம் டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகளில் தீபாவளியை முன்னிட்டு, 2021 நவம்பர் 2 அன்று ஜெய் பீம் வெளியாகிறது.

இந்தப் படத்தை த.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2D எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விசயம், இதில் நாயகனாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதே.

இந்த டிரைலர் படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப்படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது.

மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இது காட்டுகிறது. சமூகப்போராளியாக உருவெடுத்திருக்கும் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் இரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும் விதமாக இது அமைந்துள்ளது.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைதயாரிப்பை கவனிக்கிறார்.

நவம்பர் 2 ஆம் திகதி ,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
Previous Post Next Post


Put your ad code here