60 வயதுக்கு மேற்பட்ட19 பேர் உட்பட 23 பேர் பலி..!!!




நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (11) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,337 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டோபர் 11 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட இரு ஆண்களும் ஒரு பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்ட 08 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 19 பேர் ஒக்டோபர் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here