Tuesday 12 October 2021

இலங்கை - ஓமான் அணிகளுக்கு இடையேயான முதலாவது சர்வதேச போட்டி..!!!

SHARE



இந்த ஆண்டு தற்செயலாக வீழ்ச்சியடைந்த இலங்கை மற்றும் ஓமானுக்கிடையேயான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2021 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கு முன்னதாக இலங்கை மற்றும் ஓமான் தேசிய கிரிக்கெட் அணிகள் தமது முதலாவது T 20 கிரிக்கெட் போட்டியை 2021 அக்டோபர் 07 ஆம் திகதி ஓமானின் மஸ்கட்டில் உள்ள அல் அமரத் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின.

ஓமான் கிரிக்கெட் சபை உறுப்பினர்களுடன் இணைந்து ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் ஓமான் கிரிக்கெட்டின் தலைவர் பங்கஜ் கிம்ஜி ஆகியோர், இரு நட்பு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சம்பிரதாயபூர்வமாக கேக் வெட்டி, இரண்டு தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் மனுஜ காரியப்பெரும மற்றும் ஓமான் நாட்டின் தலைமை கிரிக்கெட் அபிவிருத்தி அதிகாரி மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட தேசிய அணிப் பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் ஆகியோருடன் இரு நாடுகளினதும் அணித் தலைவர்களான தசுன் ஷானக மற்றும் ஸீஷன் மக்சூத் ஆகியோரின் தலைமையிலான இலங்கை மற்றும் ஓமானிய தேசிய கிரிக்கட் அணியினர் இந்த தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை மற்றும் ஓமான் கிரிக்கட் வரலாற்றில் முக்கியமான தருணத்தை குறித்து நிற்கும் வகையில் தூதுவர் அமீர் அஜ்வத் 40வது ஆண்டு நினைவுச் சின்னத்தை ஓமான் கிரிக்கெட் தலைவர் மற்றும் ஓமான் கிரிக்கெட் சபை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் கிரிக்கெட்டின் உயர்வும் அதன் கிரிக்கெட் உட்கட்டமைப்பின் அற்புதமான வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கவையாகும் என்றும், இலங்கை மற்றும் ஓமான் உறவுகளை அடுத்த ஆண்டுகளில் ஒத்துழைப்புக்கான புதிய துறைகளில் மேலும் மேம்படுத்துவதில் கிரிக்கெட் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும் குறிப்பிட்டார்
SHARE