வடக்கு வைத்தியசாலைகளுக்கு 276 வைத்தியர்கள் புதிதாக நியமனம்..!!!


நீண்ட இழுபறியின் மத்தியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் பலனாக வடக்கு மாகாணத்திற்கு வைத்தியர்கள் 276 பேர் புதிதாக நியமிக்கப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் உள்ளக பயிற்சியினை நிறைவு செய்த வைத்தியர்கள் வடக்கின் வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்திற்கு வைத்தியர்கள் 128 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 63 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 13 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 12 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 07 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு 06 பேர்,

அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு 02 பேர்,

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு 02 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

எழுவைதீவு வைத்தியசாலைக்கு ஒருவர்,

இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு 02 பேர்,

பலாலி, குரும்பசிட்டி வைத்தியசாலைக்கு ஒருவர்,

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

புன்னாலைக்கட்டுவன் வைத்தியசாலைக்கு ஒருவர்,

உடுவில் வைத்தியசாலைக்கு ஒருவர்,

உரும்பிராய் வைத்தியசாலைக்கு ஒருவர்,

வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும்

வவுனியா மாவட்டத்திற்கு 48 பேர்

வ வுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு 42 பேர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு 03 பேர்,

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

மாமடு பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

நேரியகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 31 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 18 பேர்,

முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு 02 பேர்,

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

ஜெயபுரம் வைத்தியசாலைக்கு ஒருவர்,

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

பளை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

வன்னேரிக்குளம் வைத்தியசாலைக்கு ஒருவர்,

வேரவில் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

மன்னார் மாவட்டத்திற்கு 38 பேர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு 26 பேர்,

முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு 03 பேர்,

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி பணிமனைக்கு 02 பேர்,

அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

இரணைஇலுப்பைக்குளம் வைத்தியசாலைக்கு ஒருவர்,

நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

பெரியமடு வைத்தியசாலைக்கு ஒருவர்,

பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

வெள்ளாங்குளம் வைத்தியசாலைக்கு ஒருவர்,

விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 28 பேர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு (மாஞ்சோலை) 17 பேர்,

மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு 04 பேர்,

மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு ஒருவர்,

கொக்குளாய் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர்,

துணுக்காய் வைத்தியசாலைக்கு ஒருவர்,

வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர், நியமிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here