யாழில் 2 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு..!!!


பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

வட்டுகோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த குழந்தை இன்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.

குழந்தை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது.

இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி குழந்தை உயிரிழந்தது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here