Wednesday 13 October 2021

இலங்கையை வந்தடைந்த 30,000 மெட்ரிக் தொன் உரம்..!!!

SHARE



அரசுக்கு சொந்தமான உர நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் க்ளோரைட் அடங்கிய ஒருதொகை சேதன பசளை இன்று (13) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

30, 000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் க்ளோரைட் அடங்கிய சேதன பசளை கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளாா்.

இந்த சேதன பசளைத் தொகையைஅம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மேம்பாட்டு மையங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் சில மாதங்களுக்கு முன்னர் இரசாயன பசளை பயன்பாட்டை அரசாங்கம் தடைசெய்திருந்தது.

அதனையடுத்து நாட்டில் ஏற்பட்ட உரப்பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக நாடுபூராகவுமுள்ள விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாய உற்பத்திகளின் விலை அதிகரித்து, உற்பத்தியின் திறனும் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE