கிழக்கு மாகாணத்தில் தரம் 1 - 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள மொழி மூல 165 பாடசாலைகளும், தழிழ் மொழி மூல 423 பாடசாலைகளும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதோடு, பாடசாலை வளாகம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்ட பின்னர் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரிகளின் மேற்பார்வையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வலயக்கல்வி பணிப்பாளர்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news