எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீன்பிடி அலுவலக தோட்டத்திற்கு அருகில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒருவர் மற்றவரை தள்ளும் போது சிறிய நீரோடை ஒன்றில் விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பாணந்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (15) மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
sri lanka news