நைஜீரியாவில் சிறைச்சாலைக்குள் புகுந்த ஆயுததாரிகள் -800 கைதிகள் தப்பியோட்டம்


 நைஜீரியாவில் சிறைச்சாலைக்குள் புகுந்த ஆயுததாரிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.

அந்நாட்டின் ஒயோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் கைதான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறைச்சாலைக்குள் நேற்று துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் சிறைக்காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. மேலும், சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 800 கைதிகளை விடுதலை செய்தது.இதனால் கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், தப்பியோடிய கைதிகளில் 262 பேரை மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 575 கைதிகளை கைது செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.  

Previous Post Next Post


Put your ad code here