பாடசாலைகளில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளினூடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தடுப்பூசித் திட்டத்துக்கமைய 16 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
பாடசாலைகளில் தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள், வார இறுதி நாட்களில் வைத்தியசாலைகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான முறையில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கியமெனவும் அவர் வலியுறுத்தினார்.
Tags:
sri lanka news