கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்தின் அனைத்த வருவாயும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதிபர் - ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முடிவை விட சிறந்த சலுகை வழங்க முடியாது என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள முடிவை ஏற்று எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு அதிபர் - ஆசிரியர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
sri lanka news