முப்படை மற்றும் பொலிஸாரை சந்தித்த வடக்கு ஆளுநர்..!!!


வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.

வட மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார ,யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த லியனகே, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், கடற்படை, விமானப் படை,இராணுவ அதிகாரிகளிடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
Previous Post Next Post


Put your ad code here