லாவோஸ் நாட்டின் காவல்துறையினர் 55 மில்லியன் ஐஸ் ரக போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
பானங்களை ஏந்திச்செல்லும் லொரியில் 55.6 மில்லியன் ஐஸ் மாத்திரைகளும் 1.5 டன் ஐஸ் கட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆசியாவைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் கைப்பற்றப்பட்ட அதிகமான போதைப்பொருட்கள் இது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அண்மை சில ஆண்டுகளாக மியன்மாரின் ஷான் மாநிலத்திலிருந்து லாவோஸுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
சம்பவம் நடந்த போக்கோ வட்டாரம் மியன்மார், லாவோஸ், தாய்லந்து ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
அது போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் இடமாகக் கருதப்படுகிறது.
Tags:
world news