நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அவர் தமது வழமையான மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அவர் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
அத்தோடு இந்திய சினிமாத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, இவ்வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags:
cinema news