மீண்டும் இலங்கைக்கான விமான சேவைகள் ஆரம்பம்..!!!


இலங்கைக்கான விமான சேவைகளை ஐந்து விமான நிறுவனங்கள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

ரஷ்யா மற்றும் இத்தாலியில் இருந்து இயக்கப்படும் மேலும் இரண்டு விமானங்கள் டிசம்பரில் இலங்கைக்கு விமான சேவையை தொடங்குகின்றன.

இந்நிலையில் சுவிஸின் ஓய்வு விமான நிறுவனமான எடல்வீஸ் (Edelweiss)மற்றும் ஏர் பிரான்ஸ்( Air France ) ஆகியன நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமானங்களை ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் ( Aeroflot )விமானங்களும் நவம்பரில் மீண்டும் இலங்கைக்கு சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை முன்னெடுக்குமாறும் சுற்றுலா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here