தனது மூன்று மகள்களுக்கும் விஷம் அருந்தச் செய்து தாயும் விஷம் அருந்திய சம்பவம் ஒன்று பதுளை, வேவெல்ஹின்ன தோட்டத்தில் பதிவாகி உள்ளது.
31 வயதுடைய தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாக தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் குறித்த நால்வரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news