இத்தாலியில் வாழ்ந்து வரும் இலங்கைப் பெண்ணொருவர் தான் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்து விட்டு தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் வெரோனா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்படி அவரது 3 மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளையே அவர் கொலை செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் படுக்கையறையிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தாய் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரா? என்பது தொடர்பில் இத்தாலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tags:
sri lanka news