நாட்டில் சீமெந்து விலை தொடர்ந்து உயரும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில் சீமெந்து விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமையே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மூடை ஒன்றின் விலை மட்டும் 1300 ரூபாயை தாண்டுவதாகவும் எதிர்காலத்தில் இதன் விலை மேலும் உயரலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை அரசு நீக்கிய நிலையில், சீமெந்து மூடைக்கு ரூ.1090 என புதிய விலையை அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆனால், தற்போதைய விலை வரம்பு ரூ.1,300-ஐ தாண்டும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், கட்டுமானத் தொழிலின் விலை கடுமையாக உயரும் நிலை உள்ளது. ஏற்கனவே சிமெந்து தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் கடுமையாக முடங்கியுள்ளது.
Tags:
sri lanka news