திருகோணமலையில் இருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று இன்று (12) அதிகாலை விபத்துக்குள்ளாதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான குறித்த வாகனமானது, வீதியின் அருகிலுள்ள பாலம் ஒன்றுனையும் உடைத்துக்கொண்டும் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தடம்புரண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news